தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்
தமிழ் உரைமரபின் தொன்மை தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புகளுக்குக் காரணமாக அமைபவை அதன் இலக்கிய இலக்கண வளங்கள் மட்டுமன்று. அந்த இலக்கிய இலக்கணங்களை விளக்குவதற்கு எழுந்த உரைகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பைத் தமிழ் மரபிற்கு வழங்கியுள்ளன. தமிழ் இலக்கிய, இலக்கண மரபைப் போன்று தமிழ் உரை மரபும் தனக்கென மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகத் திகழ்கிறது. தமிழில் இன்று கிடைத்துள்ள உரைகளுள் முதலாவதாக அமைவது இறையனார் களவியல் என்னும் நூலுக்கு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய உரையாகும். எனினும், இந்த உரை கிடைத்தனவற்றுள் முதலாவதே தவிரத் தமிழின் முதல் உரை அன்று. காண்டிகையும் உரையும் தொல்காப்பியப் பெருநூல் உரை வகைகளாகக் குறிப்பிடுவது காண்டிகை, உரை என்ற இரண்டை மட்டுமே. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். (பொருள். 647, இளம்.) விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமை