அறியப்படாத தமிழ் உலகம் - தமிழ் உரிச்சொல் பனுவல்
முன்னுரை தொல்காப்பிய உரியியலில் தோன்றிய தமிழ்ச் சொற்பொருள் விளக்க மரபானது 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரத்தின்வழி நிகண்டு என்னும் தனி வகையாகத் தமிழ் மரபில் நிலைபெற்றது. ஐரோப்பியர் வருகைக்குப் பின் அகராதி என்னும் வடிவம் தமிழ் மரபில் செல்வாக்கு பெற்ற பின்பும் தமிழில் நிகண்டுகள் உருவாக்கும் பணி நடைபெற்று வந்துள்ளதைக் காணமுடிகிறது. மன்னக் கல்வி முறைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்நிகண்டுகளிலிருந்து பெருமளவிலான தரவுகளைத் தொடக்க காலத் தமிழ் அகராதிகள் பெற்றுள்ளன. இருப்பினும் தமிழ் நிகண்டுகளில் உள்ள சொல்வளம் இன்னமும் தமிழுலகால் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. தமிழ்மொழியின் சொற்களஞ்சியங்களாக அமைந்திருக்கும் நிகண்டுகளில் மிக அண்மைக் காலத்தில் அதாவது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதி வெளியிடப்பட்டதான தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் நிகண்டினை அறிமுகப்படுத்தும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. தமிழ் உரிச்சொல் பனுவல் தமிழ் உரிச்சொற் பனுவல் என்னும் இந...