நூல் அறிமுகம் - தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுட்தொகைப் பனுவல்கள்
நூல் : தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுட்தொகைப் பனுவல்கள் ஆசிரியர் : சுஜா சுயம்பு வெளியீடு : சந்தியா பதிப்பகம், சென்னை. ஆண்டு : 2016 தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கப் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில்தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ்விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக...