Posts

Showing posts from June, 2018

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்

தமிழ் உரைமரபின் தொன்மை             தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புகளுக்குக் காரணமாக அமைபவை அதன் இலக்கிய இலக்கண வளங்கள் மட்டுமன்று. அந்த இலக்கிய இலக்கணங்களை விளக்குவதற்கு எழுந்த உரைகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பைத் தமிழ் மரபிற்கு வழங்கியுள்ளன. தமிழ் இலக்கிய, இலக்கண மரபைப் போன்று தமிழ் உரை மரபும் தனக்கென மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகத் திகழ்கிறது. தமிழில் இன்று கிடைத்துள்ள உரைகளுள் முதலாவதாக அமைவது இறையனார் களவியல் என்னும் நூலுக்கு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய உரையாகும். எனினும், இந்த உரை கிடைத்தனவற்றுள் முதலாவதே தவிரத் தமிழின் முதல் உரை அன்று. காண்டிகையும் உரையும்             தொல்காப்பியப் பெருநூல் உரை வகைகளாகக் குறிப்பிடுவது காண்டிகை, உரை என்ற இரண்டை மட்டுமே.             பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்             கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்.    (பொருள். 647, இளம்.)             விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்             சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா             ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்             மேவாங் கமை

நூல் அறிமுகம் - தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுட்தொகைப் பனுவல்கள்

Image
நூல்                :       தமிழ்த் தொகுப்பு மரபு   எட்டுட்தொகைப் பனுவல்கள் ஆசிரியர்         :        சுஜா சுயம்பு வெளியீடு      :        சந்தியா பதிப்பகம், சென்னை. ஆண்டு          :        2016       தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கப் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில்தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன.       சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ்விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக அமைகிறது ‘தமிழ்த்தொகுப்பு மரபு’ என்னும் இந்நூல். சங்கப்பாடல்களுக்கு அமைந்த இக்குறிப்புகள் குறித்துத் தற்காலத் தமிழ்ப் புலமை உலகில் நிலவி வரும் பொதுவான / மேம்போக்கான எண்ணங்களைக் களைந்து, அத்தகு விளக்கங்கள் குறித்து நல்லதொரு புரிதலை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது.   சங்கப் பாடல்களுக்குத் தரப்பட்

கபிலர் தந்த அடைகள்

முன்னுரை           குறிஞ்சித் திணையுடன் தன் மனதை முழுவதும் ஒன்றவைத்துப் பெற்ற உணர்வுகளைக் கவிதையாக வடித்தவர் கபிலர். குறிஞ்சித்திணையைக் காட்சிப்படுத்தும் கபிலரது கவித்துவம் குறிஞ்சிப்பாட்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது எனச் சொல்வதற்குச் சான்றுகள் தேடவேண்டியதில்லை. குறிஞ்சிப்பாட்டில், தோழியானவள் பாறைமேல் பரப்பிய பூக்களாகக் கபிலர் காட்டியவற்றின் எண்ணிக்கை தொண்ணூற்றொன்பது. அவற்றுள் அவரால் அடைகொடுக்கப்பட்ட பூக்களின் எண்ணிக்கை முபத்திரண்டு. கபிலரால் பூக்களுக்குச் சுட்டப்பட்ட அடைகளை மட்டும் முன்னிறுத்தி விவாதிக்கிறது இக்கட்டுரை.             சங்கப் பனுவல்களின் மொழியமைப்பில் அடைகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. தலைமக்களும் அவர்தம் உடல் உறுப்புகளும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும் அணிகலன்கள், இசைக்கருவிகள், படைக்கருவிகள், வாழ்விடப் பொருள்கள் முதலிய செயற்கைப் பொருள்களும் அவை பயின்று வரும் இடங்கள் பலவற்றிலும் அடைபெற்றே வந்துள்ளன. சங்கப் பனுவல்களுள் அடைகள் பரக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றைத் தனித்த சொல்வகைகளாகத் தமிழ் மரபிலக்கணங்கள் கொள்ளவில்லை. எனி