Posts

Showing posts from February, 2018

சொல்வலை வேட்டுவன் - பா.ரா.சுப்பிரமணியன்

Image
பனுவல் இணைய நூல் அங்காடியில் சொல்வலை வேட்டுவன் நூல் வாங்கிட இங்கே சொடுக்குக புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் சுவைமிகுந்த தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலைத் தேர்ந்த தமிழ் அகராதியியல் அறிஞரும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (முதற்பதிப்பு), மரபுத்தொடர் அகராதி உள்ளிட்டவைகளின் முதன்மைப் பதிப்பாசிரியருமான பா. ரா. சுப்பிரமணியன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சொற்களுக்கும் அவருக்குமான நெருங்கிய உறவும், நெடுநாள் தொடர்பும் அவர் தன் நூலுக்கு இட்ட தலைப்பின் வழியே புலப்பட்டுவிட்டன. இந்நூல் நாட்டுப்புறவியல் குறித்த கட்டுரைகளையும், அகராதியியல் குறித்து கட்டுரைகளையும், பல்வகை என்னும் தலைப்பில் சில கட்டுரைகளையும் என மொத்தம் 34 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.       நாட்டுப்புறவியல் என்னும் முதல் பகுதியில் நாட்டுப்புற இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் முறையிலும் அவற்றின் தனித்தன்மைகளைக் காட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை நூலாசிரியர் தமிழாய்வுலகில் நாட்டுப்புறவியல் என்னும் ஆய்வுத்துறை பெரிதும் அறிமுகமாகாத காலங்களில் எழுதியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணமாகவே

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

I தமிழ் அகராதி வரலாற்றின் தொடக்கமாகத் தொல்காப்பிய உரியியல் விளங்குகிறது , உரியியல் தவிர்த்து இடையியல் , மரபியல் உள்ளிட்ட இயல்களிலும்  சொற்பொருள் விளக்கம் தருவனவாகச் சில நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. வரலாற்று முறையில் அமைக்கப்படும் தமிழ் அகராதி ஒன்றிற்குத் தொல்காப்பிய உரியியலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சில பொருள் விளக்க நூற்பாக்களும் பங்களிப்பைத் தர முடியும் , இந்நேரடியான பங்களிப்பு ஒருபுறம் இருக்க , தொல்காப்பியரால் வேறு நோக்கத்திற்காக ஆக்கப்பட்ட நூற்பாக்கள் சிலவற்றிலிருந்தும் பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய அல்லது அகராதி ஒன்றை உருவாக்கும் பணிக்குத் துணைபுரியக்கூடிய சில வழிமுறைகளை வகுத்துக்கொள்ள முடிகிறது. வேறு நோக்கத்தில் ஆக்கப்பட்ட நூற்பாக்களிலிருந்து ஊகிப்பதன் அடிப்படையில் பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய சில கருத்துகளை எடுத்துத்தர முயல்கிறது , இக்கட்டுரை. கட்டுரை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் உரியியல்பற்றிய சில பொதுவான செய்திகளும் இரண்டாம் பகுதியில் தொல்காப்பிய நூற்பாக்களிலிருந்து பெறப்பட்ட அகராதியியலுடன் தொடர்புடைய செய்திகளும் தரப்பட்டுள