Posts

Showing posts with the label இலக்கணம்

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்

தமிழ் உரைமரபின் தொன்மை             தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புகளுக்குக் காரணமாக அமைபவை அதன் இலக்கிய இலக்கண வளங்கள் மட்டுமன்று. அந்த இலக்கிய இலக்கணங்களை விளக்குவதற்கு எழுந்த உரைகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பைத் தமிழ் மரபிற்கு வழங்கியுள்ளன. தமிழ் இலக்கிய, இலக்கண மரபைப் போன்று தமிழ் உரை மரபும் தனக்கென மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகத் திகழ்கிறது. தமிழில் இன்று கிடைத்துள்ள உரைகளுள் முதலாவதாக அமைவது இறையனார் களவியல் என்னும் நூலுக்கு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய உரையாகும். எனினும், இந்த உரை கிடைத்தனவற்றுள் முதலாவதே தவிரத் தமிழின் முதல் உரை அன்று. காண்டிகையும் உரையும்             தொல்காப்பியப் பெருநூல் உரை வகைகளாகக் குறிப்பிடுவது காண்டிகை, உரை என்ற இரண்டை மட்டுமே.             பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்             கரப்பின்றி முடிவ...

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

  எவன் ஆலவாயிடை வந்த அமுதவாய் உடையன் என இயம்பப்பெற்றோன்           எவன் பண்டைப் பனுவல் பல இறவாது நிலவ உரை எழுதி ஈந்தோன்           எவன் பரம உபகாரி எவன் நச்சினார்க்கினியன் எனும் பேராளன்           அவன் பாதம் இருபோதும் எப்போதும் மலர்க எனது அகத்து மன்னோ.                                                                               - உ.வே. சாமிநாதையர் முன்னுரை           தமிழ்மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்...

இலக்கன நூற்பா வாசிப்பு : அருத்தாபத்தியும் மாட்டேறும்

முன்னுரை             பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் பெரும்பாலான நூல்கள் செய்யுள் வடிவிலேயே செய்யப்பட்டன. மேலும், நூல்கள் நுண்மையாகவும் செறிவான கருத்துகளுடனும் அமைவது புலமையுலகில் போற்றப்பட்டுள்ளது. நுண்மையாகவும் செறிவாகவும் யாப்புவிதிகளுக்கு உட்பட்டும் அமையும் செய்யுள்களை அல்லது நூற்பாக்களைப் படைப்பதற்கு நல்ல புலமை தேவைப்பட்டது. அது போலவே அச்செய்யுள்களையும் அந்நூற்பாக்களையும் விளங்கிக் கொள்வதற்கும் நல்ல புலமை தேவைப்பட்டது. அத்தகைய செய்யுள்களை அல்லது நூற்பாக்களைப் புலமை நலம் பெற்றவர்கள் பலமுறை படித்ததன் பயனாக அவற்றை அணுக வேண்டிய முறைகளை அல்லது அவற்றிற்குரிய வாசிப்பு முறைகளைக் கண்டறிந்தனர். இவ்வாறு காலம் காலமாகத் தமிழ்ப் புலமையுலகு தொகுத்துள்ள முறைகளே பொருள்கோள்கள் எனவும் தந்திர உத்திகள் எனவும் பரிணமித்துள்ளன.             இலக்கியச் செய்யுள்களின் பொருளை வெளிப்படுத்த உதவும் அல்லது வாசிக்க உதவும் முறைகள் பொருள்கோள்களாகவும் இலக்கண நூற்பாக்களின் நுண்பொருளை வெ...