நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை
எவன் ஆலவாயிடை வந்த அமுதவாய் உடையன் என இயம்பப்பெற்றோன் எவன் பண்டைப் பனுவல் பல இறவாது நிலவ உரை எழுதி ஈந்தோன் எவன் பரம உபகாரி எவன் நச்சினார்க்கினியன் எனும் பேராளன் அவன் பாதம் இருபோதும் எப்போதும் மலர்க எனது அகத்து மன்னோ. - உ.வே. சாமிநாதையர் முன்னுரை தமிழ்மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்...